ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியைக் கைவிட்டு கொரோனா பாதிப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே வலியுறுத்தினார்.
சிவசேனா சார்பில் நடைபெற்ற தசரா விழாவில் பேசிய அவர், ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் பழைய வரிவிதிப்பு முறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவில்களைத் திறக்காதது குறித்து மகாராஷ்டிர ஆளுநர் தெரிவித்த கருத்துக்கும் அவர் பதிலளித்தார்.