பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மற்றும் பங்குகளை விற்பதன் மூலம், 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா உள்ளிட்ட 48 நிறுவனங்களை, தனியார் மயமாக்க ஏற்கனவே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், மேலும் சில பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களையும், அவற்றின் பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் தனியார் மயமாக்கப்பட வேண்டிய நிறுவனங்களின் விவரங்கள் பரிந்துரைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.