கொரோனா பரவல் காரணமாக ஏழு மாதங்களாக முடங்கிக் கிடந்த இனிப்புக் கடைகள், பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் களைகட்டியுள்ளன.
மாதக்கணக்கில் இனிப்புக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வியாபாரிகள் வருமானம் இழந்தனர். நவராத்திரி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளின் வருகையால் களையிழந்த இனிப்புக் கடைகளில் விதவிதமான இனிப்பு வகைகள் கண்களைக் கவர்ந்து நாவுக்கு சுவையூட்டுகின்றன.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரபலமான இனிப்புக் கடைகளுக்கு மக்கள் மீண்டும் வரத்தொடங்கிவிட்டனர். கல்யாண முகூர்த்தங்களும் நடப்பதால் வியாபாரிகள் முகத்தில் மகிழ்ச்சி தென்படுகிறது.