மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தன்னிடம் தமிழில் பேசி பாராட்டியது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிப்பதாக, தூத்துக்குடியை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் பொன்.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
சலூன் கடை நடத்தி வரும் பொன்.மாரியப்பன், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு, தன்னுடைய சலூன் கடையிலேயே மினி நூலகம் நடத்தி வருகிறார்.
8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், வாசிப்பின் மீது கொண்ட பிரியத்தால், நுலகம் நடத்தி, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், புத்தக வாசிப்பு மீது நாட்டத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனை அறிந்த பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பொன்.மாரியப்பனின் பெயரைக் குறிப்பிட்டு, தமிழ் மொழியிலேயே பேசி பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் பாராட்டியது எல்லையற்ற மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள பொன்.மாரியப்பன், தனது வாழ்நாளில் பல சாதனைகளை புரிவேன் எனக் கூறியுள்ளார்.