குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த விவகாரத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் சிலரால் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் சார்பில் நடக்கும் வருடாந்திர தசரா கொண்டாட்டங்களை ஒட்டி நாக்பூரில் இருந்து காணொலியில் அவர் உரை நிகழ்த்தினார். குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து வகுப்புவாத மோதல்களை நடத்த சிலர் நினைத்தாலும், கொரோனா வைரசால் அது அடங்கி விட்டதாக அவர் கூறினார்.
இந்துத்துவா என்பது, இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்பதால், அந்த சொல் 130 கோடி இந்தியர்களுக்கும் பொருந்தும் என்றார்.