2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு அந்த தொகையை, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் 5 ஆம் தேதிக்குள் வரவு வைக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலாக காலகட்டத்தில் கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட மாதாந்திர தவணை அவகாச காலத்திற்கு, வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதன்படி அந்த காலகட்டத்திற்கு, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு மாதாந்திர தவணைக்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்யுமாறு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.