இந்தியாவிலேயே செயற்கைக்கோள்களை தயாரிக்கவும், விண்ணில் செலுத்தவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளரும் இஸ்ரோ தலைவருமான கே. சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இஸ்ரோதான் செயற்கைக்கோள் தயாரித்து, விண்வெளியில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், புதிய விண்வெளி கொள்கையை விண்வெளி ஆராய்ச்சி துறை தயாரித்து வருவதாகவும், அதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்திய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்தோ, கூட்டு சேராமலோ வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடி அன்னிய முதலீடு மேற்கொள்வதற்கும், விண்வெளி சம்பந்தப்பட்ட தயாரிப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அனுமதியளிக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.