மும்பையின் சிவாஜி பார்க் பகுதியில் உள்ள வங்காள கிளப்பில் துர்கா பூஜை வெகுவித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது.
கோவிட் காலத்துக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கூட்டத்தைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரசாதம் கூட வீட்டுக்கே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அர்ச்சகர் மற்றும் தொழில் நுட்பத்துறையினர் மட்டுமே கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
சானிட்டைசர் பொருந்திய மின்விசிறிகள் மூலம் காற்று சுத்தம் செய்யப்பட்டது. பாலிவுட் செட் வடிவமைப்பாளர் நிதின் சந்திராகாந்த் இந்த பூஜைக்கான பந்தலை வடிவமைத்தார்