டெல்லியிலிருந்து கோவா சென்ற விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக பீதியைக் கிளப்பிய பயணியை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
டெல்லியைச் சேர்ந்த ஜியா உல் ஹக் என்பவர் ஏர் இந்தியா விமானத்தில் கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, தான் டெல்லி சிறப்பு காவல் பிரிவு அதிகாரி என்றும், விமானத்தில் தீவிரவாதி ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அதிரடிப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் கோவாவில் தரையிறங்கியதும் ஜியா உல் ஹக்கை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.