வெங்காயத்தின் விலை கிலோ நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வருகிற நிலையில் நவம்பர் மாதம் வரைதான் வெங்காயம் கையிருப்பு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் விலை மேலும் உயரலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது. தற்போது 25 ஆயிரம் டன்கள் வெங்காயம் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக தேசிய வேளாண்மை கூட்டுறவு வர்த்தக அமைப்பு (National Agricultural Cooperative Marketing Federation of India- NAFED) தெரிவித்துள்ளது.
வங்காளதேசம், இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற பல அண்டை நாடுகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தையே நம்பியுள்ளதால் அந்த நாடுகளிலும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.