இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பும், இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்து வருகின்றன.
நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்து 224 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்ததால், இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.
98 நாட்களுக்குப் பின் உயிரிழப்பு குறைந்துள்ளது. 70 லட்சத்து 75 ஆயிரம் பேர் பெருந்தொற்றிலிருந்து குணமான நிலையில், 6 லட்சத்து 69 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.