மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பட்னாவிஸ், அம்மாநிலத்தில் பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் தமக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பட்னாவிஸ் பதிவிட்டுள்ளார்.