மும்பையில் பணியிலிருந்த போக்குவரத்து காவலரை பொது இடத்தில் பெண் தாக்கிய வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கல்பதா தேவி சாலையில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் தம்மிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி, அவரை அந்த பெண் கடுமையாக தாக்கினார்.
பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், அவருக்கு அரணாக இருந்து கொண்டு இக்காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்தார். இந்தத் தாக்குதலில் போக்குவரத்து காவலரின் மேல் சட்டை கிழிந்ததுடன், அவர் லேசான காயமும் அடைந்தார்.
போக்குவரத்து காவலரின் அழைப்பை ஏற்று, அங்கு ரோந்து பணியிலிருந்த போலீசார் விரைந்து வந்து பெண்ணை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பெண் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.