ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் அனுப்பப்பட்ட டிரோனை இந்திய ராணுவம் இன்று காலை சுட்டுவீழ்த்தியது.
கேரன் செக்டாரில் இன்று காலை 8 மணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தால் அனுப்பப்பட்ட குவாட்காப்டர் ரக டிரோன் பறப்பதை கண்டுபிடித்து அதை சுட்டுவீழ்த்தினர்.
இதையடுத்து அதை கைப்பற்றி நடத்திய சோதனையில், அந்த டிரோன், சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டிஜேஐ மேவிக் 2 புரோ மாடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதுகுறித்து ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.