இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் என்ன, அதில் எவ்வளவு தொகை தரவுகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுகிறது என நாடாளுமன்றக் கூட்டுக் குழு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் கொள்கைத் தலைவர் அங்கி தாஸ், நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது அவரிடம், விளம்பரதாரர்களின் வணிக நலன்கள் அல்லது தேர்தல் நோக்கங்களுக்காக, பயனர்களின் தரவுகளை பேஸ்புக் எடுக்கக்கூடாது என, எம்பிக்கள் குழு பரிந்துரைத்துள்ளது.