திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவத்தின் கடைசி நாளான இன்று கோவில் வளாகத்திலேயே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
முன்னதாக ரங்கநாயகம் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு, பால், தேன், தயிர், மஞ்சள், குங்குமம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பிறகு கோயில் வளாகத்துக்குள் ஏற்பாடு செய்திருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இன்று மாலை நடக்கும் கொடி இறக்கத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 17,577 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 88 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.