புதிய இந்தியாவில் ஊழல்வாதிகளையும் இடைத்தரகர்களையும் சகித்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் ஊழலைக் களையவும் ஊழல்வாதிகளை தண்டிக்கவும் தமது அரசு ஓய்வின்றி உழைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதிய இந்தியாவில் ஊழலுக்கும் இடைத்தரகர்களுக்கும் இடமில்லை என்றும் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக அரசு நடத்தும் யுத்தத்தில் பொதுமக்களும் சமபங்கு ஏற்குமாறு மோடி அழைப்பு விடுத்தார்.