ஜார்க்கண்ட் மாநிலத்தில் 22 காட்டு யானைகள் எல்லை தாண்டி ஒடிசா மாநிலம் கரஞ்சியா என்ற வனப்பகுதி வழியாக ஊருக்குள் கூட்டமாகப் புகுந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
வயல்களில் கிடைத்த பயிரை எல்லாம் சேதம் செய்த யானைகள் சாலைகளிலும் நடமாடியதால் வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
கிராமப்புற மக்களை அச்சத்தில் ஆழ்த்திய அந்த காட்டு யானைகள் தாமாகவே திரும்பிச் சென்றன.