காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி, கஸ்பா மற்றும் மால்டி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கி மற்றும் மோர்ட்டர் ஆகியவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.