மும்பையில் மத்திய பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் பெட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் ரயிலின் பெட்டியில் அதிகாலையில் பற்றிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.