நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 54,366 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.மேலும் 690 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 312ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 306 ஆகவும் அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 979 பேர் குணமானதால், குணமானோர் எண்ணிக்கை 69 லட்சத்து 48 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 303 குறைந்ததால், அந்த எண்ணிக்கை 6 லட்சத்து 95 ஆயிரத்து 509ஆக குறைந்துள்ளது.