டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் ஷிவாங்கி, சுபாங்கி மற்றும் தியா சர்மா ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவிற்கு டோர்னியர் விமானங்களை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 9 மாத பயிற்சிகளுக்குப் பிறகு டோர்னியர் விமானத்தில், அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் விரைவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.