ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆறு ஒன்று இருந்ததற்கான தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட், கொல்கத்தா ஐஐஎஸ்இஆர் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பைகானெர் அருகே நல் பகுதியில் இந்த சான்றுகள் கிடைத்துள்ளன.
தார் பாலைவனத்தின் மத்தியில் ஓடிய இந்த ஆறு, கற்கால மனிதர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான அடிப்படையாக அமைந்திருந்ததாகவும், பல்வேறு பகுதியில் இருந்து இங்கு புலம்பெயர்வுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.