கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் பீகாரில் உள்ள அனைவருக்கும் அது இலவசமாகப் வழங்கப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று வெளியிட்டார்.
கொரோனா தடுப்பூசி சோதனைகள் பல கட்டத்தில் இருப்பதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள பாஜக, தேவையான உரிமங்களை பெற்று அது பெருமளவிலான உற்பத்தி நிலையை எட்டியவுடன் பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என கூறியுள்ளது.
தங்களது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முதலாவது தேர்தல் வாக்குறுதி இது எனவும் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.