நீர் மூழ்கிகளை தாக்கி அழிக்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் கவராட்டி போர்க்கப்பல், இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது.
இந்திய கடற்படையால் வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐஎன்எஸ் கவராட்டி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் கப்பல்துறை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் கவராட்டி போர்க்கப்பலை இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே ஒப்படைத்தார்.
நீர் மூழ்கிகளை அழிக்கும் வகையில் உள்நாட்டில் கட்டப்பட்ட 4வது போர்கப்பலான ஐஎன்எஸ் கவராட்டி, இலக்குகளை கண்டறிந்து தாக்கும் வகையில் அதிநவீன ஆயுதங்கள், சென்சார் தொகுப்புகளை கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.