ராணுவ டாங்குகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை, இறுதி கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் ராணுவ எல்லைக்குட்பட்ட பகுதியில், 3 ஆம் தலைமுறை நாக் ஏவுகணையின் இறுதிகட்ட சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்டது.
இதில் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கு துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் 10 கட்ட பரிசோதனையையும் நாக் ஏவுகணை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நாக் ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும்.