பத்து கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள டாங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணையை, 2 மாதங்களில் இந்தியா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் இருந்து ஏவப்படக் கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஏவுகணை, ரஷ்ய தொழில்நுட்பத்தை கொண்ட எம்ஐ-35 ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் உள்ள டாங்கிகளை அழிக்கும் திறன் கொண்ட Shturm ஏவுகணை இந்தியா வசம் உள்ள நிலையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த புதிய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.