சுஷாந்த்சிங் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை கங்கணா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி ஆகியோர் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இருவர் மீதும் மும்பையின் பாந்த்ரா காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு மதத்தவரிடையே பகையை மூட்டியது, போதைப் பொருள் பயன்படுத்தியது, மும்பை பாலிவுட்டை அவதூறாக பேசியது போன்ற புகார்களை அடுத்து கங்கணா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.