வேளான் மசோதாவுக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
செவ்வாய் அன்று, பஞ்சாப் சட்டசபையில், மத்திய அரசின் வேளான் மசோதாவுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் தன் ட்விட்டர் பக்கத்தில், வேளான் மசோதா குறித்த நிலைப்பாட்டில் ஆம் ஆத்மி கட்சி இரட்டை வேடம் போடுவதாகவும், பஞ்சாபை பின்பற்றி வேளான் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், மாநில அரசுகளால், மத்திய அரசின் சட்டங்களை மாற்ற முடியுமா என பஞ்சாப் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.