தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இந்தியா கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் மிசெல் பேச்லெட் கவலை தெரிவித்திருந்ததற்கு , மனித உரிமைகள் என்ற பெயரில் சட்ட மீறல்களை அனுமதிக்க முடியாது என்று இந்தியா பதிலளித்துள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தில் திருத்தம் செய்துள்ள இந்தியா, தன்னார்வ அமைப்புகள் பதிவுக்கு ஆதாரையும் கட்டாயமாக்கியுள்ளது.
ஐ.நா,. மனித உரிமை ஆணையத்திற்கு பதலளித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இந்தியா சுதந்திரமான நீதித்துறை கொண்ட நாடு என்றும், சட்டத்தின்படி ஆளப்படும் ஜனநாயக ரீதியான நாடு என்றும் தெரிவித்துள்ளார்.