மனித உரிமை என்ற பெயரில் சட்டவிரோதமான செயல்களை மறைக்க முடியாது என்று இந்தியா ஐநா.சபையின் மனித உரிமை கமிஷன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா, இந்தியா சட்டத்தின் வழியாக ஆட்சியை நடத்துகிற ஜனநாயக நாடு என்றும் அதற்கென சுதந்திரமான நீதித்துறை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஐநா. சபையின் மனித உரிமைக் குழுவின் தூதர் மிச்சல் பாச்லெட் Michelle Bachelet என்.ஜி.ஓக்கள் மீது இந்தியா விதித்த கட்டுப்பாடுகள், கைது நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.