கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதை கைவிட வாய்ப்புள்ளதாக, இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், குணமடைவதை விரைவுபடுத்துவதிலும், உயிரிழப்புகளை தடுப்பதிலும், பிளாஸ்மா சிகிச்சை முறை சாதகமான முடிவுகளை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து, பிளாஸ்மா சிகிச்சை முறையை தவிர்க்க வாய்ப்புள்ளதாக பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.