கொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 30 மில்லியன் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போது பேசிய அவர், 30 மில்லியனில் 7 மில்லியன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் அடங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
30 மில்லியனுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான உள்கட்டமைப்பு ஏற்கனவே நாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.