திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில், முக்கிய நிகழ்வான கருட சேவை கோவில் வளாகத்திற்குள் எளிய முறையில் மக்கள் இன்றி நடைபெற்றது.
கல்யாண உற்சவ மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி காட்சியளித்தார். வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் கருட சேவையில் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் இம்முறை கொரோனா தொற்று பரவலின் காரணமாக வீதி உலா ரத்து செய்யப்பட்டதால், கோவில் வளாகத்துக்குள் நடைபெற்றது .கருட சேவையை முன்னிட்டு கோவில் வளாகம் 4 டன் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக காட்சி அளித்தது.
ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கற்பூர ஆரத்தி கொடுத்து வழிபட்டனர்.