கொரோனா தொற்றில் இருந்து ஒருவர் குணமடைந்த பிறகும், தொடர்ந்து முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதித்த ஒருவரின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி 5 மாதங்களில் குறைந்து விடும் என்பதால், அலட்சியமாக இருந்தால் மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னதாக பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் 64 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருப்பதாக தெரிவித்தார்.