ஐதராபாத்தில் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்கு நடிகர்கள் சீரஞ்சிவி, நாகார்ஜூனா, மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட தெலுங்கு திரையுலகத்தினர் லட்சகணக்கில் நிதியளித்துள்ளனர்.
அங்கு அண்மையில் பெய்த திடீர் கனமழையால் 70 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து நிவாரண நிதி வழங்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்று நடிகர்கள் சீரஞ்சிவியும், மகேஷ் பாபுவும் தலா ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளனர். நாகார்ஜூனா 50 லட்ச ரூபாயும், ஜூனியர் என்டிஆர் 50 லட்ச ரூபாயும், விஜய் தேவர கொண்டா 10 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளனர்.