ராகுல் காந்தி கண்டித்த பின்னரும், பாஜக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்புக் தெரிவிக்க முடியாதென காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் மறுத்துள்ளார்.
தாப்ரா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் இமார்தி தேவியை கமல்நாத் சர்ச்சைக்குரிய வார்த்தையில் விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், ராகுல் காந்தி தனது அபிப்ராயத்தை வெளியிட்டுள்ளார் எனவும், யாரையும் அவமதிக்கும் வகையில் பேசாதபோது தாம் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பினார்.