கொரோனா தொற்றின் விளைவாக மூளை நரம்பு பாதிக்கப்பட்ட முதலாவது சிறுமிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
11 வயதான இந்த சிறுமிக்கு , அந்த வயது பிரிவுக்குள் உள்ள நோயாளிகளில் முதன்முறையாக Acute Demyelinating Syndrome எனப்படும் ஏடிஎஸ் நோய் ஏற்பட்டது.
ஏடிஎஸ் ஏற்பட்டால், மூளையில் உள்ள மைலின் பாதிக்கப்பட்டு, பல்வேறு வகையான நரம்பியல் கோளாறுகள் ஏற்படும். குறிப்பிட்ட சிறுமிக்கு பார்வைத் திறன் பாதிக்கப்பட்டது.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து 50 சதவிகித பார்வைத் திறன் திரும்பியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போன்று 13 வயதான சிறுமிக்கு மூளை வீக்கம் ஏற்பட்டதற்கு கொரோனா தொற்று காரணமா என மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.