வழி தவறிய எருது ஒன்றை கண்டுபிடிப்பதில் உள்ளூர் மேய்ப்பர்களுக்கு உதவ முன்வந்த காரணத்தாலே சீன போர்வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாக சீன ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
நேற்று முன்தினம் டெம்சோக் பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் காணப்பட்ட வாங் யா லாங் என்ற சீன வீரரை நமது படையினர் கைது செய்தனர்.
அவருக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு அவர் பத்திரமான நிலையில் உள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீன ராணுவம் கைது செய்யப்பட்ட தங்களது வீரரை இந்தியா பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீன வீரருக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு, அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.