கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில், சமூகதள செயற்பாட்டாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதைத் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மம்தாவின் அரசு விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 76 லட்சம் விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை எனவும் நட்டா கூறினார்.