வங்க கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே நடக்கும் வருடாந்திர மலபார் கடற்போர் ஒத்திகையில் பங்கேற்க இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் மத்திய அரசு விரைவில் அழைப்பு அனுப்பும் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் 3 முதல் 6 வரை மற்றும் 17 முதல் 20 வரை நடக்கவுள்ள இந்த ஒத்திகையில் பங்கேற்க அமெரிக்காவும், ஜப்பானும் ஏற்கனவே இசைவு தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவும் இந்த ஒத்திகையில் இணைவதை தொடர்ந்து, இந்திய பசிபிக் கடற்பகுதியில் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நான்கு நாடுகளும் ஒத்திகையை நடத்த உள்ளன.
குவாட் பயிற்சி என அழைக்கப்படும் இந்த ஒத்திகை, லடாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என டெல்லியில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.