உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் 7 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பெற்றோர் ஒப்புதலுடன் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.