அசாம்-மிசோரம் மாநில எல்லையில் இருமாநில மக்களிடையே பயங்கர மோதல் நேரிட்டது குறித்து டெல்லியில் இன்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
இருமாநிலங்களும் 164 புள்ளி 6 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து வரும் நிலையில், 1995 முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அசாம் உரிமை கொண்டாடும் பகுதியில் மிசோரம் அரசு சார்பில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டதால் இரு மாநில மக்களிடையே சனிக்கிழமை மோதல் உருவானது.
கற்களாலும், தடிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் பல குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து பதற்றம் உருவாகியுள்ளதால் மிசோரம் அரசு, ரிசர்வ் படையினரை அங்கு நிறுத்தி உள்ளது.
class="twitter-tweet">Assam: State Minister for Environment and Forest Parimal Suklabaidya visited Lailapur area in Cachar district yesterday where few houses and stalls were set ablaze by miscreants on the night of October 17. pic.twitter.com/73dOoaX9Pv
— ANI (@ANI) October 18, 2020