நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அரசுத் தரப்பில் தாமதமாக மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள், 663 நாள் தாமதத்திற்குப் பின்னர் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
குறித்த நேரத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தவறினால் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.