வனத்துறையைச் சேர்ந்த 5 தன்னாட்சி நிறுவனங்களுக்கு நிதியளிப்பதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தன்னாட்சி நிறுவனங்களின் எண்ணிக்கையையும், செலவினங்களையும் குறைக்க நிதியமைச்சகம் பரிந்துரைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய வனஉயிரின நிறுவனம், இந்திய வன மேலாண்மை நிறுவனம், சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையம், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் உள்ளிட்ட முக்கிய 5 தன்னாட்சி நிறுவனங்கள், இதேபோல் மேலும் 5 நிறுவனங்களுக்கான நிதியைக் குறைக்க மத்திய வனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.