மும்பையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மோனோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
செம்பூர் மற்றும் சாந்த் கட்ஜ் மகராஜ் சவுக் இடையே இயக்கப்பட்ட மோனோ ரயில் சேவையும் நாளொன்றுக்கு 100 டிரிப் என்ற வகையில் பகுதியளவு தொடங்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிந்தோருக்கும், ஆரோக்கிய சேது செயலியில் நெகடிவ் என ரிசல்ட் வருவோருக்கும் மட்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெர்சோவா மற்றும் காட்கோபார் இடையே நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.