திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
காடுகளின் ராஜாவான சிங்கம் மீது அமர்ந்த யோக நரசிம்ம அவதாரத்தில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி மோட்சம் அடையும் என்பது நம்பிக்கை.
கல்யாண உற்சவர் மண்டபத்தில் யோக நரசிம்ம அவதாரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆர்த்தி எடுத்து வழிபட்டனர்.
ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 18,108 பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 36 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.