ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளதை ஒட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நவராத்திரியின் முதல் நாளில் மாதா சைல புத்ரியை வணங்குவதாகவும், அன்னையின் ஆசீர்வாதங்களுடன், நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர அன்னையின் ஆசீர்வாதங்கள் நமக்கு பலம் அளிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சைலபுத்ரியை போற்றும் பாடலுடன் கூடிய புகைப்பட வீடியோவையும் மோடி பதிவிட்டுள்ளார்.