லடாக் மோதலால் இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆசிய சமூக கொள்கை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், சீனாவுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நல்லுறவை கட்டமைத்து இருந்தது என்றார்.
இதற்காக 1993-ம் ஆண்டு முதல் ஏராளமான ஒப்பந்தங்கள் போடப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்த ஒப்பந்தங்களும் செயலிழந்து போனதாக அவர் கூறினார்.
எல்லையில் சீனா படைகளை குவித்திருப்பது ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்ற அவர், இதன் மூலம் மிகப்பெரிய அரசியல் தாக்கமும், இருதரப்பு உறவில் மிகப்பெரிய பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.