யுரேனிய கழிவு தொட்டிகளில் இருந்து கசிவு ஏற்பட்டு, கதிர்வீச்சு வெளியானதாக எழுந்த புகார் குறித்து, உயர்நிலைக் குழு அமைத்து விசாரிக்க மேகாலயா அரசு முடிவு செய்துள்ளது.
மேகாலயா மாநிலத்தின், தென்மேற்கு காசி மலை மாவட்டத்தில், யுரேனிய படிவம் நிறைந்த பகுதிகள் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்னர், அவற்றை எடுப்பதற்காக துளையிட்டு ஆய்வு செய்தபோது உருவான கழிவுகள், கதிரியக்க நஞ்சை வெளிப்படுத்தாத வகையில், தொட்டிகளில் அடைக்கப்பட்டன. '
இந்த தொட்டிகளில் விரிசல் ஏற்பட்டு, கதிர்வீச்சு வெளியானதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து மேகாலயா அரசு விசாரணை நடத்த உள்ளது.